RSS Feed

நானும்...

Posted by உத்ரா

உன்
வெளிச்ச பிம்பத்தை
உள்ளிறக்கும்
முயற்சியில்
திணறிப் போய்
செயலிழந்து நிற்கும்
என் எந்திரத்தை
போலவே
நானும் ...

----------உன் புகைப்படம்---------

Posted by உத்ரா

முதன்
முறையாய்
அதுவும்
முழுவதுமாய்
நான் கண்ட
மின்னலின்
நிழல்.

உன் புகைப்படம்

Posted by உத்ரா

என் நினைவுகளின்
எல்லா அணுக்களையும்
மூளை சலவை
செய்து விட்டு
காதலின் ஏக்கங்களில்
கந்தகத்தை தூவி விட்டு
இமைகளை விடாமல்
இழுத்து பிடித்து கொண்டு
காட்சியாய் எந்தன்
கண்களில் நிலைத்து
பொய் பார்வை
கொடுத்த உன்
மெய் பிரதி.

காதல்...

Posted by உத்ரா

யதார்த்தத்தில் பிரவேசிக்க
எத்தனிக்கும் போதெல்லாம்
கனவு கரங்களால்
கண்களை மூடி விடும்
காதல்...

தரிசு நிலம்

Posted by உத்ரா

கைவிரல் கலப்பைகளில்
காயம் காணாமல்

மொத்தமாய் நனைத்துவிடும்
முத்த மழை பெய்யாமல்

வெட்கத்தோடு நீ (பு)(வி)தைக்கும்
மொட்டு முகமுமில்லாமல்

சுட்டெரிக்கும் காதலிலேயே
சூடேறி சூடேறி

கருகிப்போன பயிர்களோடு
உருகி நிற்கும் என்

மார்பு..,