Saturday, June 13, 2009

உங்களுக்கு ஒன்றும் தெரியாது

தனிமை சிறையில் வலை
மேய்ந்து கொண்டிருக்கிறது.
வெறுமைச் சிலந்தி.

துப்பக்கூட திராணி இல்லாமல்
தூசுக்குள் முகம் புதைக்கிறது
துடைக்கப்படாத நிலைக்கண்ணாடி.

துப்பட்டா குடைக்குள்
நனையாத மழை காற்று வீசி
என் ஜன்னல் அறைகிறது.

சாரல் பட்ட திட்டுக்களுடன்
சாத்திய கண்ணாடிக் கதவை
மழை கழுவுகிறது.

ஊடுருவிப் பார்த்தாலும்
உங்களுக்கு ஒன்றும் தெரியாது
உள்ளிருந்து நான் அழுவது.

8 comments:

அன்புடன் அருணா said...

///ஊடுருவிப் பார்த்தாலும்உங்களுக்கு ஒன்றும் தெரியாதுஉள்ளிருந்து நான் அழுவது.//
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க!!!

தமிழ் said...

/ஊடுருவிப் பார்த்தாலும்
உங்களுக்கு ஒன்றும் தெரியாது
உள்ளிருந்து நான் அழுவது./

அருமை

Vishnu - விஷ்ணு said...

நல்லா இருக்குங்க உங்க கவிதை

இரசிகை said...

nallaayerukku.. uthra!

azhaatha..naangallaam irukkom ok va..

saranece@gmail.com said...

மிக்க நன்றி அருணா, திகழ்மிளிர் , விஷ்ணு மற்றும் அண்ணி.

இரசிகை said...

saththama anni nu sollurathu santhosamaa irukku...:)

iNbAh said...

மிகவும் அழகான ஆழமான பதிவு...அருமை....

இரசிகை said...

chumma thirumba vanthu vaasithen.
appo vida ippo innum puriyuthu.
:)