Wednesday, April 22, 2009

வரசொல்லுங்கள் அவளை ...

அவள் 
வசந்த காலத்து 
வண்ணத்துபூச்சி.

உயிரை உரசினாள்
வண்ணக் காயங்கள்
உடன் நடந்தாள்
மகரந்த சுவடுகள்
தனித்து பறந்தாள்
வெறுமை தடயங்கள்.

நினைவுகளின் 
நிழலில் 
இது 
உயிர் 
உதிர் காலம்.

ஏக்கங்களின் கோடையிலும் 
தாக்கங்களின் குளிரிலும் 
வறண்டு போகும் 
சூன்யத்தின் கல்லறை
என்
எதிர்காலம்.

வழி தெரிந்தால் 
உயிர் பசித்தால் 
வரசொல்லுங்கள் 
அவளை.

என்
கல்லறை பூக்களில் 
காதல் நிரப்பி 
வைத்திருப்பேன்.

6 comments:

இரசிகை said...

saththamaai
oru sabaash...
"un ninaivugalin
nizhazhil
uyer uthir kaalam"
yenum varihalukku..

இரசிகை said...

vannak kaayangal..
maharanthach chuvadugal..
verumain thadayangal...
"VAAZHLKKAI NADATHTHINAAYAA
VANNATHTHUPPOOTCHIYUDAN":-)

இரசிகை said...

un vaarthaihalukkul
valainthu pona
aththanai... "kaalangalum"
yen nigazhl kaalathai
sugamaai karaiththathu...

saranece@gmail.com said...

மிக்க நன்றி அண்ணி,
மறக்காம விமர்சிக்கிறதுக்கு.

இரசிகை said...

yethayume marakkaa mudiyaathathuthaan yen belaveename...

azhahaana belaveenam illaya?

ஒளியவன் said...

நீ உம்மென்று சொல், பிறகு நீ கல்லறைப் பூக்களில் காதல் நிரப்ப வேண்டாம், உன் கை விரல் பூக்களில் கூடல் நிரப்பினால் போதும். மற்றவை எங்கள் கையில்!


இப்படிக்கு,
உன்னை நேசிக்கும் வாசகன்