Thursday, May 7, 2009

வேறென்ன செய்ய?

எத்தனிக்கும் வார்த்தைகளை
எச்சி விழுங்கி முடித்த
இரக்கமில்லாத மாலை அது.

கடைசியாய் உன்னை கண்ட கணங்கள்
கண்களில் புரையோடிவிட்ட ரணங்கள்.

எனக்கோ உனக்கோ யார் முகமும் பார்க்க
இயலாத சந்திப்புஇறுதிச் சந்திப்பு!

வார்த்தை ரவைகளை இழுத்துப் பிடித்த
வாய்த் துப்பாக்கி விரைத்து விட்டது.
தோரணத் துப்பட்டா துவண்டு போய் கிடந்தது.

காற்றில் அலைந்த கற்றை குழலொன்று  
கண்ணீர்ப்பசை உபயத்தில் உன்
கன்னத்திலேயே ஒட்டிக் கொண்டது.

நம்மவர்களுக்காகவே விட்டுக் கொடுத்திருந்தோம்
நம்மை நாமே.

என்னை உடைத்து உன்னை உடைக்க
விரும்பாமல் இறுகப் பிடித்திருந்தேன் என்னை.
உன் கண்ணீரில் தான் கரைந்து விட்டேன் .

எதுவுமே பேசாமல் எழுந்து நின்றோம்
பிரிந்து செல்ல.

விக்கித்த வார்த்தை சேர்த்து
வெறுமையாய் வாழ்த்தினாய்
"என்னை விட சிறந்தவளாய்
உன்னைத் தேடி வருவாள்என.

விரக்தியாய் சிரிக்காமல்
வேறென்ன செய்ய?


7 comments:

இரசிகை said...

naanum verenna seiyaa??
un kavithaihalukkul
karainthu povathaith thavirra...

இரசிகை said...

nenjadaithup ponathennavo
unmaithaan...
un vaarthaihalil
kottiyiruntha valihalai ulvaangiyathaal..!!

இரசிகை said...

kaneerp pasaiil
yen ithayamum ottik
kondathu....

தமிழ் said...

சொல்ல வார்த்தை இல்லை

saranece@gmail.com said...

நன்றி திகழ் மிளிர்

saranece@gmail.com said...

மிக்க நன்றி அண்ணி ,

"கண்ணீரில் கழுவப்பட்ட கண்களுக்குத்
தான் புண்ணிய தரிசனம் கிடைக்கும்"
- ஒரு அறிஞர்
யாருக்கு அந்த பாக்கியமோ?

ஒளியவன் said...

வாசித்த பின்னர் வேதனையோடு செல்லாமல் வேறென்ன செய்ய?


இப்படிக்கு,
உன்னை நேசிக்கும் வாசகன்